NANGANALLUR POOJASHOP AYURVADIC SHOP HERBAL SHOP CUNTRYDURGS SIDHA MEDICIEAN S.S.NAATTU MARUNTHU SHOP NANGANALLUR CHENNAI

Visit Website Add Favorites Contact Author
no-image-25595

S.S.NAATTU MARUNTHU SHOP,39 TH STREET,4 TH MAINROAD,VASANTH&CO BACK SIDE,NANGANALLUR CHENNAI-600061 CELL-09994111405,09840238108 NANGANALLUR POOJASHOP AYURVADIC SHOP HERBAL SHOP CUNTRYDURGS SIDHA MEDICIEAN S.S.NAATTU MARUNTHU SHOP NANGANALLUR CHENNAI Nanganallur,ayurvedic,sidha,countrydrugs,herbal,beauty,hairoil,shampoo,aloeveragel,homam Toggle navigation

Free classifieds in India, classified ads in India (For Sale, Personals, Vehicles, Real Estate, Community,…) Free classifieds in India, classified ads in India (For Sale, Personals, Vehicles, Real Estate, Community,…)

India’s Largest MarketplaceSell anything from used cars to mobiles, furniture, laptops, clothing & more…

Submit an AdSELLFree

Home

Sign in or Register | Favorites My Ads My OLX | OLX Mobile Apps

Help

Safety Tips

Ad Posting Rules

Contact OLX

Terms Of Use

Privacy Policy

About OLX

OLX near you

×

×

Browse Cities | Sitemap

GO

Congratulations! Your ad will be available on OLX in 3 to 6 hours.

As soon as your ad is active we’ll send you an email notification. Meanwhile you can edit it and create the best ad.

Edit it Post another ad

All categories Sports & Health Health & Beauty

Nanganallur,ayurvedic,sidha,countrydrugs,herbal,beauty,hairoil,shampoo,aloeveragel,homam,

14/07/2014

100 (Fixed price)

Click here to zoom

Nanganallur,ayurvedic,sidha,countrydrugs,herbal,beauty,hairoil,shampoo,aloeveragel,homam, – Nanganallur

hakkeem 09994111405

hakkeem 09994111405

Chennai

S.s.naattu marunthu shop,39 th street,4 th main road,vasanth@co back side,nanganallur chennai-600061.CELL-09994111405,9840238108

இதுவரை இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள மூலிகைகளின் பெயர் பட்டியல்

1 துளசி Ocimum sanctum

2 குப்பை மேனி

3 தூதுவளை

4 பிரண்டை

5 ஓரிதழ் தாமரை

6 வல்லாரை

7 கரிசலாங்கண்ணி

8 கடுக்காய் Terminalia chebula

9 வேம்பு Neem

10 திருநீற்றுப்பச்சிலை Sweet basil

11 அருகம்புல் Cynodon doctylon

12 ஆவாரை Cassia auriculata

13 பசலை கீரை Portulaca quadrifida

14 சோற்றுக் கற்றாழை Aloevera

15 முருங்கை Moringa oleifera

16 வில்வம் Aegle marmelos Correa

17 மருதோன்றி Lawsonia inermis

18 கண்டங்கத்தரி Solanum indicum Linn

19 நாயுருவி Prickly Chaff Flower

20 கருவேப்பிலை aaku means leaf

21 பொன்னாங்கண்ணி Alternanthera

22 நெல்லிக் காய் Embilica officinallis

23 நெருஞ்சில் Tribulus Terrestris

24 கீழாநெல்லி phyllanthus Amarus

25 பப்பாளி Papaya

26 இஞ்சி-சுக்கு Ginger

27 கற்பூரவள்ளி Coleus Aromaticus

28 நாவல் Syzygium Cumini

29 அத்தி Ficus glomerata

30 அரசு

31 ஆல் Ficus Benghalensis

32 சீரகம் Cuminum Cyminum

33 செம்பருத்தி Hibiscus

34 மஞ்சள் Curcuma Longa

35 எலுமிச்சை Citrus Medica

36 ஆடாத்தொடை Adatoda Vasica Nees

37 நன்னாரி Hemidesmus Indicus

38 கொத்தமல்லி Coriander

39 வெற்றிலை Piper Betel

40 புதினா Mint

41 சங்கு புஷ்பம் Ternatea

42 தாமரை Lotus

43 அம்மான் பச்சரிசி Snake weed

44 பொடுதலை Lippia

45 தும்பை Leucas Aspera

46 அகத்தி Sesbania grandiflora

47 கிராம்பு Cloves

48 முடக்கத்தான் Cardiospermum Halicacabum

49 அவுரி

மூலிகைகள், மருத்துவம்

மூலிகைகள் விளக்கம்

துளசி

குப்பை மேனி

தூதுவளை

பிரண்டை

ஓரிதழ் தாமரை

வல்லாரை

கரிசலாங்கண்ணி

கடுக்காய் Terminalia chebula

வேம்பு – NEEM

திருநீற்றுப்பச்சிலை – Sweet basil

அருகம்புல் – Cynodon doctylon

துளசி – Ocimum sanctum

செம்பருத்தி Hibiscus rosa-sinensis

பசலை கீரை – Portulaca quadrifida

ஆவாரை – Cassia auriculata

சோற்றுக் கற்றாழை – Aloevera

முருங்கை – Moringa oleifera

வில்வம் – Aegle marmelos Correa

மருதோன்றி – Lawsonia inermis

கண்டங்கத்தரி- Solanum indicum Linn

நாயுருவி – Prickly Chaff Flower

கருவேப்பிலை – aaku means leaf

பொன்னாங்கண்ணி – Alternanthera

நெல்லிக் காய் – EMBILICA OFFICINALLIS.

நெருஞ்சில் TRIBULUS TERRESTRIS

கீழாநெல்லி – PHYLLANTHUS AMARUS

பப்பாளி – papaya

இஞ்சி-சுக்கு – Ginger

கற்பூரவள்ளி – Coleus Aromaticus

நாவல் – SYZYGIUM CUMINI

அத்தி – FICUS GLOMERATA

அரசு

ஆல் – Ficus Benghalensis

சீரகம் – Cuminum Cyminum

மஞ்சள் – Curcuma Longa

எலுமிச்சை – CITRUS MEDICA.

ஆடாத்தொடை – Adatoda Vasica Nees

நன்னாரி – HEMIDESMUS INDICUS

கொத்தமல்லி – coriander

வெற்றிலை – PIPER BETEL

புதினா – Mint

சங்கு புஷ்பம் – Ternatea

தாமரை – Lotus

அம்மான் பச்சரிசி – Snake weed

பொடுதலை – Lippia

தும்பை – LEUCAS ASPERA

அகத்தி – Sesbania grandiflora

கிராம்பு – cloves

முடக்கத்தான் – CARDIOSPERMUM HALICACABUM

அவுரி – Indigo

சித்த மருத்துவம தண்ணீர்விட்டான் கிழங்கு தவசு முருங்கை தழுதாழை

தாழை

தாளிசபத்திரி

தான்றிக்காய்

திப்பிலி

துத்தி

தும்பை

துளசி

தூதுவளை

தேற்றான்கொட்டை

நஞ்சறுப்பான்

நந்தியாவட்டை

நன்னாரி

நாயுருவி

நாவல்

நித்யகல்யாணி

நிலவேம்பு

நிலாவிரை

நீர்முள்ளி

நுணா

நெருஞ்சி

நெல்லி

நொச்சி மூலிகைப் பட்டியல் தண்ணீர்விட்டான் கிழங்கு தவசு முருங்கை தழுதாழை

தாழை

தாளிசபத்திரி

தான்றிக்காய்

திப்பிலி

துத்தி

தும்பை

துளசி

தூதுவளை

தேற்றான்கொட்டை

நஞ்சறுப்பான்

நந்தியாவட்டை

நன்னாரி

நாயுருவி

நாவல்

நித்யகல்யாணி

நிலவேம்பு

நிலாவிரை

நீர்முள்ளி

நுணா

நெருஞ்சி

நெல்லி

நொச்சி

அடுத்தது:

பொதுவான மூலிகைகளின் பட்டியல்: பாகம் – IV.

மூலிகை விபரங்கள்:

54:தண்ணீர்விட்டான் கிழங்கு

Asparagus Racemosus

உடல் பருக்க, வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.

55:தவசு முருங்கை

Justicia Tranquebarensis

குழந்தைகளுக்கு சளி தீர.

56:தழுதாழை

Clerodendrum Phlomides

மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்.

57:தாழை

Pandanus Odoratissimus

வெட்டை நோய், உடல் எரிச்சல்.

58:தாளிசபத்திரி

Taxus Buccata

இருமல், இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்து.

Top மேலேGo Top

59:தான்றிக்காய்

Terminalia Bellerica

தொண்டை வலி, தொண்டைக்கட்டு.

60:திப்பிலி

Piper Longum

தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி.

61:துத்தி

Abutilon Indicum

மூலம், வெள்ளைப்படுதல்.

62:தும்பை

Leucas Aspera

குழந்தைகளுக்கு கோழை வெளியேற்ற.

63:துளசி

Ocimum Sanctum

சளி, இருமல், வறட்டு இருமல், காய்ச்சல்.

Top மேலேGo Top

64:தூதுவளை

Solanum Trilobatum

இருமல், சளி, ஜீரண சக்தி அதிகரிக்க.

65:தேற்றான்‍கொட்டை

Strychnos Potatorum

மூலம், சிறுநீர்க்கட்டு, வெள்ளைப்படுதல்.

66:நஞ்சறுப்பான்

Tylophora Asthmatica

ஆஸ்துமா.

67:நந்தியாவட்டை

Ervatamia Divaricata

கண் நோய்கள்.

68:நன்னாரி

Hemidesmus Indicus

உடல் சூடு, மேல் பூச்சாக தோல் நோய்களுக்கு.

Top மேலேGo Top

69:நாயுருவி

Achyranthes Aspera

உடல் பலம், பற்பொடி.

70:நாவல்

Syzygium Cumini

சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு.

71:நித்யகல்யாணி

Catharanthus Roseus

நீரழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய்.

72:நிலவேம்பு

Andrographis Paniculata

காமாலை, காய்ச்சல், கல்லீரல் குணமடைய.

73:நிலாவிரை

Cassia Senna

மலச்சிக்கல்.

Top மேலேGo Top

74:நீர்முள்ளி

Hygrophila Auriculata

நீர்சுருக்கு, சிறுநீர்க்கட்டு.

75:நுணா

Morinda Coreia

மாந்தம், கழிச்சல்.

76:நெருஞ்சி

Tribulus Terrestris

நீர்கடுப்பு, வெள்ளைப்படுதல்.

77:நெல்லி

Phyllanthus Emblica

உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.

78:நொச்சி

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்!

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்

பயன்களும்!

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல்

ஆரோக்கியத்தைக் காப்பாற்ற

மூலிகை செடிகளின் இலை, வேர், காய்,

பழம், பட்டை, மற்றும், விதைகளைப்

பயன்படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த

சித்தர்கள், தன்வந்திரி, மூலனார்,

நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத்

திறனாலும் அனுபவத்தாலும் பல

மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில்

எழுதிவைத்துள்ளனர்.சுமார் 4000

வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில்

மூலிகை மருத்துவத்தைப்

பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆயுர்

வேதமருத்துவத்தில் 341 மருந்துச்

செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

தற்போது இது நடைமுறையில் உள்ளது.நம்

நாட்டில் சுமார் 2000 முதல் 7000

வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளன.

இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச்

செடிகள் நாட்டு மருந்துகள்

தயாரிப்பிலும் 100 முதல் 150

மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும்

பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம்

மூலிகை செடியிலிருந்து

மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த

மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால்

மூலிகை மருந்து உற்பத்தியில் நம்

நாடு 15வது இடத்தை வகிக்கின்றது.

நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை,

மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப

நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன.

அதனால் ஏற்றுமதியில் முன்னேற்றம்

அடைந்துள்ளோம்.

மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில்

தீராத நோய்களையும் பக்க விளைவுகள்

இன்றி குணப்படுத்தவும்,

பிணியின்றி வாழவும் இயற்கையான

முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள்,

மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும்,

ஆங்கில மருத்துவத்தை விட

மூலிகை மருத்துவப்

பணச்செலவு குறைவாக இருப்பதாலும்,

மேலும் பக்க விளைவுகளும்

இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம்

காட்டுகின்றனர்.இந்நிலையில்

இங்கு பரவலாக நாம் பயன்படுத்தும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன்

பயன்களும்:-

அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை,

கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள்

பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும்,

சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பவுடர் :- அதிகமான

கொழுப்பை குறைக்கும். இரத்த

கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி,

ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பவுடர் :-

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த

மூலிகையாகும்.

நவால் பவுடர் :- சர்க்கரை நோய்,

தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும்,

நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி,

ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச

கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும்,

உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி,

இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பவுடர் :- இரத்த

கொதிப்புக்கு சிறந்தது, உடல்

குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பவுடர் :-

ஆண்மை குறைபாடு,

மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல்

நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பவுடர் :-

நரம்பு தளர்ச்சி நீங்கும்,

ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு,

சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பவுடர் :- வாய் புண்,

வயிற்றுபுண் ஆறும்.

சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த

மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பவுடர் :- உள், வெளி,

நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல்

கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு,

அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பவுடர் :- வயிற்றுபுண்

ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல்,

வரட்டு இருமல் நீங்கும், குரல்

இனிமையாகும்.

துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள்,

வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பவுடர் :-

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல்

நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பவுடர் :-

அனைத்து விஷக்கடிக்கும்,

சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை,

சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி,

முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி,

உடல் பொலிவு, சரும

பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு,

தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு,

கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பவுடர் :-

ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பவுடர் :-

கொழுப்புசத்தை குறைக்கும்.

மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை,

கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள்

அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள்

இருக்கும்.

வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக

கோளாறு, கல் அடைப்புக்கு மிகச்

சிறந்தது.

மணத்தக்காளி பவுடர் :- குடல் புண்,

வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல்,

வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பவுடர் :- பேன் உதிரும்,

முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பவுடர் :- ஜீரண

கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு,

ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண்

நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பவுடர் :- நீரில்

கலந்து குடித்துவர சூடு குறையும்,

முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி,

வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பவுடர் :- உடல்

குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி,

நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக

கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால்

ஏற்படும் அதிகப்படியான

இழப்பை சரி செய்யும், உடல்

வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பவுடர் :-

தினசரி பூசி வர முகம்

பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர

நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும்,

வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பவுடர் :- உடல்

குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பவுடர் :- கை , கால்களில்

பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை,

பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்..

மூலிகை ஸ்நான பவுடர்

மூலிகை ஸ்நான பவுடர்

இயற்கையான மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே மூலிகை ஸ்நான பவுடர் தயாரித்து வைத்து உபயோகிப்பது மிக மிக நல்லது. சாதாரண தினசரி உபயோகத்திற்கு சீயக்காய் கலக்காமலும் எண்ணெய் குளியல் அல்லது எண்ணெய் பிசுக்கை அகற்ற சீயக்காய் கலந்து வைத்துக் கொண்டும் உபயோகிக்கலாம். மூலிகை ஸ்நான பவுடரை தயிர், பால், தண்ணீர், இளநீர், பன்னீர், வெள்ளரி, ஜூஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் அரை மணி நேரம் கலந்து பிசைந்து வைத்து பின்னர் தடவி குளித்திட சிறந்த பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

கஸ்தூரி மஞ்சள் – 10 கிராம்

சோம்பு – 10 கிராம்

பச்சிலை – 10 கிராம்

கோஷ்டம் – 10 கிராம்

இலவங்கம் – 10 கிராம்

தாளிசபத்திரி – 10 கிராம்

கோரைக்கிழங்கு – 50 கிராம்

நன்னாரி வேர் – 50 கிராம்

சந்தனத் தூள் – 150 கிராம்

மாகாளி கிழங்கு – 10 கிராம்

விலாமிச்சை வேர் – 10 கிராம்

மஞ்சிட்டா – 10 கிராம்

ரோஜா மொட்டு – 10 கிராம்

பூலாங்கிழங்கு – 50 கிராம்

வெட்டி வேர் – 50 கிராம்

மரிக்கொழுந்து – 100 கிராம்

மகிழம் பூ – 100 கிராம்

உலர்ந்த எலுமிச்சம் பழத் தோல் – 350 கிராம்

செய்முறை

இவை அனைத்தையும் நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும் எலுமிச்சம் பழச் சாறு பிழிந்த தோல்களை மட்டும் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினசரி குளியலுக்கு அப்படியே உபயோகிக்கலாம். அல்லது பால், தயிர், இளநீர், பன்னீர், வெள்ளரி ஜூஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் அரை மணி நேரம் ஊற வைத்தும் உபயோகிக்கலாம். எண்ணெய் பிசுக்கைப் போக்குவதற்கு சீயக்காய்த்தூள் அல்லது அரப்புத் தூளுடனும் சேர்த்து உபயோகிக்கலாம். பயத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு சாதம் வடித்த கஞ்சி ஆகியவற்றுடனும் சேர்த்து உபயோகிக்கலாம்.

இது வியர்வை துர்நாற்றத்தை போக்கி தோல் வறட்சியை நீக்கி, அரிப்பு எரிச்சல் போன்றவற்றையும் நீக்கி, மேனிக்கு பொலிவும், இயற்கை மணமும், மென்மையும் தோலுக்கு பாதுகாப்பும் திசுக்களுக்கு வலுவும் அளிக்கக்

ருந்தில்லா மருத்துவம் ! ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம் !!

சளிக் காய்ச்சல்

புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு

பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்

வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு

சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு

மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

————————————————————————————————-

1.தொப்பை குறைய

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.

2.நரம்புகள் பலம் பெற

100 கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். மதியம் தயிரில் ஒரு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். 15 நாட்கள் இதைக் கடைப்பிடிக்கவும்.

குண்டாக இருப்பவர்கள் வெங்காயச்சாறு வெறும் டிவயிற்றில் அருந்த இதயக்கோளாறை முன்கூட்யே தடுக்கலாம். 100 கிராம் வெங்காயம் பொதும்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பச்சை வெங்காயத்தைத் தயிரோடு சேர்த்து உண்டால் எலும்பு மெலிவு நோய் தடுக்கப்படும்.

3.அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம் பெற

பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், கர்ப்பிணிகள், முப்பது வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அத்தியாவசியமானது. மூளையை சுறுசுறுப்பாக்குவதில் இதற்கு பெரும்பங்குண்டு. மனநிலை பாதிப்போ, முதுமையில் ஞாபக மறதி நோயோ ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலுள்ளது.

ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள்

1..பருப்பு வகைகள்

2.பீன்ஸ்

3.வெண்டைக்காய்

4.கறிவேப்பிலை

5.தண்டுக்கீரை

6.முட்டை

7.ஆட்டு ஈரல்

மூளையில் அலுமினியம் சேரக்கூடாது. ஆகையால் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் அலுமினியச் சத்து சேராது. முட்டைக்கோஸ் அதிகம் சேர்க்க வேண்டும்.

ஃபோலிக் அமிலத்தால் குணமடைபவை

1.வாழ்க்கையில் வெறுப்பு

2.காக்காய் வலிப்பு

3.மலட்டுத்தன்மை

4.தாம்பத்திய வாழ்வில் வெறுப்பு

எனவே ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளைத் தேர்வு செய்து உண்டு நல்ல பலன் பெறலாமே!

செம்பருத்தியின் மகத்தான மருத்துவம்

செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட ரத்தம் சுத்தி அடையும். இதயம் வலிமை பெறும். செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும். தலைமயிர் கருகருவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது.

இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.

சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.

1.சுக்கு,மிளகு,திப்பிலி

இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி

தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள

4.துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

6.நன்னாரி

உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

7.சோற்றுக் கற்றாழை

சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.

8.சோம்பு

உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.

9.சுரைக்காய்,பூசணிக்காய்

இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

10.விளாம்பழம்

வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.

11.அமுக்கிரா கிழங்கு

இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.

12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி

கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.

Nanganallur,ayurvedic,sidha,countrydrugs,herbal,beauty,hairoil,shampoo,aloeveragel,homam, – India

hakkeem 09994111405

hakkeem 09994111405

Chennai

 

 


No Feedback Received